January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘2031 இல் ஜோசப் விஜய் எனும் நான்’- போஸ்டரால் மதுரையில் பரபரப்பு

2031 இல் ஜோசப் விஜய் எனும் நான் உண்மையான நம்பிக்கையும், மாறா பற்றும் கொண்டிருப்பேன் என உறுதி அளிக்கிறேன்… என பதவிப் பிரமாணம் எடுப்பது போன்ற வாசகங்களுடன் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

2021 உள்ளாட்சி தேர்தலில் நல்ல தேர்வு – நீங்கள் தான் தமிழகத்தின் இறுதி தீர்வு என 169/110 என போஸ்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது .

நடிகர் விஜய்யை முதல்வராக சித்தரித்து ரசிகர்கள் ஒட்டியுள்ள போஸ்டரால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஊரக உள்ளாட்சித் தேர்தலில் பிரதான அரசியல் கட்சிகளின் உறுப்பினர்களே தோல்வியை தழுவியுள்ள நிலையில், அரசியலில் முழுசாக ஈடுபடாமல் உள்ள நடிகர் விஜய்யின் ரசிகர்கள் வெற்றியை பெற்றுள்ளது அரசியல் கட்சிகளை திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.

நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தில் இருந்து போட்டியிட்ட 169 பேரில் 110 பேர் தேர்வு செய்யப்பட்டு இருப்பதால் விஜய் ரசிகர்கள் இந்த போஸ்டரை மதுரையில் ஒட்டியுள்ளனர்.

அதில், போட்டியின்றி 13 பேர், போட்டியிட்டு 102 பேர் என மொத்தம் 115 பேர் வெற்றி பெற்றுள்ளனர்.

இந்நிலையில் மதுரையில் உள்ள நடிகர் விஜய்யின் ரசிகர்கள் ஒட்டியுள்ள சுவரொட்டி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அந்த சுவரொட்டியில் நடிகர் விஜய் முதலமைச்சராக பதவியேற்பது போல சித்தரித்து, 2031ல் ஜோசப் விஜய் எனும் நான் உண்மையான நம்பிக்கையும், மாறா பற்றும் கொண்டிருப்பேன் என உறுதி அளிக்கப்பட்டுள்ளது.

2021 உள்ளாட்சியில் நல்ல தேர்வு நீங்கள் தான் தமிழகத்தின் இறுதி தீர்வு என திடீரென ஒட்டியுள்ள போஸ்டர் அனைத்து தரப்பினரின் கவனத்தை ஈர்த்துள்ளது.