January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இந்தியா முழுவதும் விவசாயிகள் ரயில் மறியல் போராட்டம்

உத்தரப் பிரதேச மாநிலம்  லக்கிம்பூரில் இடம் பெற்ற வன்முறைக்கு எதிராக விவசாயிகள் நாடு தழுவிய  ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால் பஞ்சாப், ஹரியாணா மற்றும் ராஜஸ்தானில் 160 ரயில்களின் சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த 3 ஆம் திகதி லக்கிம்பூர் கெரிக்கு  சென்ற  மத்திய  அமைச்சர் அஜய் குமார் மிஸ்ரா, உ.பி. துணை முதல்வர் கேசப் பிரசாத் மவுரியா ஆகியோருக்கு
எதிராக கறுப்புக் கொடி காட்டி விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.
அப்போது விவசாயிகளுக்கும் பாஜகவினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில்  விவசாயிகள் உட்பட ஒரு பத்திரிக்கையாளர் என மொத்தம் 8 பேர் உயிரிழந்தனர்.
இந்த விவகாரத்தில்  மத்திய அமைச்சர் மிஸ்ராவின் மகன் ஆஷிஸ் மிஸ்ரா உள்பட 13 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதில் ஆஷிஸ் மிஸ்ரா கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த விவகாரத்தில் மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ரா ராஜனாமா செய்ய வேண்டும், அவரை கைது செய்ய வேண்டுமென்று விவசாய அமைப்புகள் கோரிக்கை வைத்து ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன.
பஞ்சாப், ஹரியாணா மற்றும் உத்திரபிரதேசத்தின் வடக்கு மாவட்டங்களிலும் ரயில் மறியல் போராட்டம் நடைபெறுகிறது. இதன் காரணமாக ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.