February 23, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘தி.மு.க அரசு வக்கிர நடவடிக்கை மூலம் மகிழ்ச்சியைத் தேடுவது கண்டனத்துக்குரியது’ :அ.தி.மு.க அறிக்கை

தி.மு.க அரசு, பழிவாங்கும் உணர்ச்சிகளை மீண்டும் பகிரங்கப்படுத்தி, வக்கிர நடவடிக்கைகள் மூலம் தற்காலிக மகிழ்ச்சியைத் தேடி இருப்பது கண்டனத்திற்குரியது என அ.தி.மு.க அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதேநேரம், அ.தி.மு.க, ஆழம் காண முடியாத அலை. கடலுக்கு ஒப்பான பேரியக்கம். இந்த இயக்கம் தி.மு.க.வின் முயற்சிகளால் முடங்கிவிடமோ, முடியாமற் போகவோ, ஓய்ந்து சாயப்போவது இல்லை எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், அ.தி.மு.க பொன்விழா கொண்டாடி வரும் எழுச்சிமிகு தருணத்தில், சென்னையிலும் மாநிலத்தின் மற்றப் பகுதிகளிலும் நடைபெற்ற உற்சாகமான விழாக்களை கண்டு மனம் பொறுக்க முடியாத தி.மு.க, விடிந்தவுடன் காவல் துறையை ஏவிவிட்டு இலஞ்ச ஒழிப்பு என்ற பெயரில் கோரத் தாண்டவம் ஆடிக்கொண்டிருக்கிறது என குற்றம் சாட்டியுள்ளது.

எத்தனை கழக நிர்வாகிகள் மீது என்னென்ன வழக்குகள் போட்டாலும் அவதூறு பரப்பினாலும், அ.தி.மு.க எதிர்காலத்தில் அடையப் போகும் வெற்றிகளை யாராலும் தடுத்து நிறுத்திவிட முடியாது என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.