இந்தியாவின் தென் பகுதியான கேரள மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தில் சிக்கி, 24 பேர் உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்தவர்களில் 5 சிறுவர்கள் உள்ளடங்குவதாகவும், இறப்பு வீதம் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கேரளாவின் இடுக்கி மற்றும் கோட்டயம் மாவட்டங்களில் நிலவும் சீரற்ற காலநிலையால் வெள்ள அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.
வீடுகள் நீரில் மூழ்கியுள்ளதோடு மண்சரிவு அனர்த்தமும் ஏற்பட்டுள்ளது.
மீட்பு நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு விமானப் படை ஹெலிகொப்டர்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
வெள்ளத்தால் இடம்பெயர்ந்த மக்கள் 100 க்கு மேற்பட்ட முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
Indian Air Force medium lift helicopters have been inducted for #floodrelief efforts in districts of #Kerala inundated due to heavy rains.#HarKaamDeshKeNaam pic.twitter.com/ZcwZRKyYZR
— Indian Air Force (@IAF_MCC) October 17, 2021