Photo: India at UN, NY/Twitter
ஐநா மனித உரிமைகள் பேரவைக்கு இந்தியா மீண்டும் தலைமை தாங்கவுள்ளது.
ஐநாவின் மனித உரிமை பேரவைக்கு சுழற்சி முறையில் ஒவ்வொரு நாடும் 3 ஆண்டுகளுக்கு தலைமை வகிக்கின்றன.
அதற்கமைய இந்தியா சமீபத்தில் அந்த பொறுப்பை ஏற்றுக் கொள்வதாக அறிவித்துள்ள நிலையில் ஐநா பொதுச்சபையில் மீண்டும் இதற்கான தேர்தல் நடைபெற்றுள்ளது.
அதில் 193 உறுப்பு நாடுகளில், 184 நாடுகள் தலைமை வகிக்கும் பொறுப்பை இந்தியாவுக்கு வழங்க ஆதரவளித்து வாக்களித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
97 வாக்குகள் பெற்றாலே, தலைமைத் தாங்க முடியும் என்ற நிலையில், பெரும்பான்மை பலத்துடன் இந்தியா மீண்டும் தேர்வாகியுள்ளது.
இந்தியாவின் தற்போதைய பொறுப்பு இந்த ஆண்டு முடிவடையவிருக்கும் நிலையில், மீண்டும் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு அந்தப் பதவியில் தொடரவுள்ளதாக ஐநாவுக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி திருமூர்த்தி டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
அதேநேரம், மனித உரிமை கவுன்சிலுக்கு இந்தியா தலைமை தாங்குவதற்கு அதிகப்படியான ஆதரவு கிடைத்திருப்பது மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
இந்தியாவுக்கு ஆதரவு அளித்த அனைத்து நாடுகளுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்வதாக ஐநாவுக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி திருமூர்த்தி தெரிவித்திருக்கிறார்.
Proud day for India 🇮🇳
India gets elected to UN #HumanRightsCouncil by a overwhelming majority
As a democratic & pluralistic country adhering to fundamental rights, 🇮🇳will continue to further #HumanRights issues
Thank you colleagues of all UN Member States for your support 🙏 pic.twitter.com/1UlvVmPC4e
— Amb T S Tirumurti (@ambtstirumurti) October 14, 2021