October 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இந்திய மாணவி சூரிய சக்தியில் இயங்கும் இஸ்திரி வண்டியை உருவாக்கி சாதனை!

(Photo : Twitter/VINISHA UMASHANKAR)

சுற்றுச் சூழலுக்கு நேசமான, சூரிய சக்தியில் இயங்கும் தெருவோர இஸ்திரி வண்டியை உருவாக்கியதற்காக இந்தியாவின் 14 வயது மாணவி சுற்றுச்சூழல் ஆஸ்கார் விருதுக்கான இறுதி போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இந்தியா திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த 9 ஆம் வகுப்பு மாணவியான வினிஷா உமாசங்கர், அண்மையில் இந்த கண்டுபிடிப்பை நிகழ்த்தியுள்ளார்.

இந்திய மதிப்பதில் 40 ஆயிரம் செலவில் உருவாக்கப்பட்டுள்ள இந்த கண்டுபிடிப்பு காரணமாக, கரியின் பயன்பாடு கட்டுப்படுத்தப்பட்டு சுற்றுச் சூழல் பாதுகாக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதற்காக இவருக்கு தேசிய அளவிலும், சர்வதேச அளவிலும் விருதுகளும், பரிசுகளும் வழங்கப்பட்டன.

 

இந்நிலையில், தற்போது இங்கிலாந்து இளவரசர் வில்லியம் உருவாக்கிய, சுற்றுச்சூழல் ஆஸ்கார் விருதுக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ள 15 பேரின் பட்டியலில் இவர் இடம்பிடித்துள்ளார்.

15 பேரில் தெரிவு செய்யப்படும் 5 பேருக்கு தலா 1 மில்லியன் பவுண்டு பரிசாக வழங்கப்படுகிறது. இது தொடர்பான இறுதி அறிவிப்பு இம்மாதம் 17  ஆம் திகதி வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

பூமி எதிர்கொள்ளும் மிகப் பெரிய சுற்றுச் சூழல் சவால்களுக்கு தீர்வு காணும் நோக்கில், சிறந்த கண்டுபிடிப்பை உருவாக்குவோருக்கு இந்த பரிசு வழங்கப்பட்டு வருகிறது.