இந்தியாவின் ஆந்திர மாநிலம் நெல்லூரில் தசரா பண்டிகையை முன்னிட்டு, வாசவி கன்னிகா பரமேஸ்வரி கோயிலில் 5 கோடி ரூபாய் பணத்தாள்களால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.
கோயில் நிர்வாகத்தினர் அம்மனையும் கோயிலையும் பணத்தாள்களால் அலங்கரித்து பிரம்மிக்க வைத்துள்ளனர்.
வாயிற்படி முதல் கர்ப்பக்கிரகம் வரை 500, 200, 100, 50, 20 ரூபாய்நோட்டுகளால் தோரணங்கள், அலங்கார வளைவுகள், மாலைகளும் வடிவமைக்கப்பட்டுள்ளன.
ஆந்திராவில் தசரா பண்டிகை வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
அம்மாநிலத்தில் உள்ள அனைத்து அம்மன் கோயில்களிலும் கடந்த 7 ஆம் திகதி முதல் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வருகிறது.
இதன்படி 5 கோடி ரூபாய் மதிப்பிலான புத்தம் புதிய நோட்டுகளைப் பயன்படுத்தி அம்மன், சந்நிதி உள்ளிட்ட பிற இடங்களும் அலங்கரிக்கப்பட்டு ள்ளன.
அத்துடன் பணம் மட்டுமல்லாமல் தங்க பிஸ்கட்டுகளால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.
இதனால் கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலுக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.