January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

தமிழக ‌ஊரக உள்ளாட்சி தேர்தல்; 115 இடங்களில் விஜய் மக்கள் இயக்க வேட்பாளர்கள் வெற்றி

தமிழகத்தில் நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் 115 விஜய் மக்கள் இயக்க ஆதரவு வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.

இந்த ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தினர் முதன் முதலாக வேட்பாளர்களை களமிறக்கியது.

இதில் எதிர்பார்த்த அளவில் வேட்பாளர்கள் வெற்றியும் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

தளபதி விஜய் மக்கள் இயக்கம் ஆதரவுடன், கட்சி சார்பு இல்லாத ஊராட்சி மன்றத் தலைவர் மற்றும் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு மொத்தம் 169 இடங்களில் போட்டியிட்டதாக அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்க பொதுச் செயலர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார்.

அதில் போட்டியின்றி 13 பேர், போட்டியிட்டு 102 பேர் என மொத்தம் 115 பேர் வெற்றி பெற்றுள்ளதாக அவர் கூறியுள்ளார்.