கொரோனாவுக்கான தடுப்பு மருந்தானது கண்டறியப்பட்டதும் இந்தியா முழுவதுமுள்ள அனைத்து மக்களுக்கும் இலவசமாக தடுப்பூசியைச் செலுத்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
அந்தவகையில் முன்னுரிமை அடிப்படையில் முதற்கட்டமாக 30 கோடி பேருக்கு இலவசமாக தடுப்பு மருந்தை செலுத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனையடுத்து தடுப்பு மருந்தானது தயாரானதும் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டிய முதல் 30 கோடி பேரை அடையாளம் காணும் பணியையும் இந்திய அரசு ஆரம்பித்துள்ளதாகக் கூறப்படுகின்றது.
அதன்படி சுமார் ஒரு கோடி மருத்துவ பணியாளர்கள், 2 கோடிக்கும் அதிகமான காவலர்கள், தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்ட முதல்நிலை பணியாளர்கள் 50 வயதை தாண்டிய 26 கோடி பேர் மற்றும் பிற நோய்களால் பாதிக்கப்பட்ட 50 லட்சம் பேர் என நான்கு பிரிவுகளைச் சேர்ந்தவர்களுக்கு முதற்கட்டமாக தடுப்பூசியை செலுத்த இந்திய அரசு திட்டமிட்டுள்ளது.