July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கறுப்புப் பணம்: சுவிஸ் வங்கிக் கணக்கு விபரங்கள் இந்தியாவிடம் ஒப்படைப்பு!

சுவிஸ் வங்கியில் கறுப்பு பணம் வைத்துள்ள இந்தியர்கள் குறித்த மூன்றாவது பட்டியலை சுவிஸ் அரசு இந்திய அரசுக்கு வழங்கியுள்ளது.

இரு நாடுகளுக்கு இடையிலான உடன்படிக்கை மூலம் ஆண்டுக்கு ஒரு முறை இதுபோன்ற ஒரு பட்டியலை சுவிஸ் அரசு வழங்கிவருகின்றது.

அதற்கமைய தற்போது தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக சுவிஸ் அரசிடமிருந்து இந்திய அரசு விபரங்களைப் பெற்றுள்ளது.

இதனடிப்படையில் கறுப்புப் பணத்தை மறைத்து வைத்துள்ளவர்கள் மீது வழக்குத் தொடர வசதியாக இருப்பதாகக் கூறப்படுகிறது.

தற்போது வெளியிடப்பட்டுள்ள இந்த பட்டியலில், தொழிலதிபர்கள், வெளிநாடு வாழ் இந்தியர்கள்,  சில தென்கிழக்கு ஆசிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் மற்றும் அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்தவர்கள் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை பெறப்பட்ட சுவிஸ் தரவுகளின்படி 100 இற்கும் அதிகமான இந்திய குடியுரிமை பெற்றவர்களின் விபரங்கள் வெளிவந்துள்ளதுடன் இதன் மூலம் நிதி முறைகேடு, வரி ஏய்ப்பு செய்தவர்களின் விபரம் சேகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த கறுப்புப் பணம் குறித்த நான்காவது பட்டியலை 2022 செப்டம்பரில், இந்திய அரசிடம் வழங்கப்படவுள்ளது.