January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

தமிழக உள்ளாட்சி தேர்தல் – வாக்கு எண்ணும் பணி ஆரம்பமாகியது

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் இரு கட்டங்களாக நடந்த உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்கெண்ணும் ‌‌‌‌‌பணி இன்று நடைபெறுகிறது.

பலத்த பொலிஸ் பாதுகாப்புடன் 74 மையங்களில் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறும் எனவும் , பிற்பகலில் இருந்து முடிவுகள் தெரியவரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது.

3,346 பதவிகளுக்கான வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட நிலையில், 24,416 பதவிகளுக்கு 80,819 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். 76 லட்சத்து 60 ஆயிரம் பேர் வாக்காளர்களாவர்.

கடந்த 6ஆம் திகதி 9 மாவட்டங்களில் உள்ள 39 ஒன்றியங்களில் 7,921 வாக்குச் சாவடிகளில் முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது.

அதில் மொத்தம் 77.43 சதவீதம் வாக்குகள் பதிவாயின. 2 ஆம் கட்ட வாக்குப் பதிவில் மொத்தம் 78.47 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

ஒவ்வொரு தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை முடிந்ததும், உடனுக்குடன் தேர்தல் முடிவுகளை அறிவிக்க வேண்டும் என மாநில தேர்தல் ஆணையர் வெ.பழனிகுமார் தெரிவித்துள்ளார்