
ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இராணுவ உயரதிகாரி ஒருவரும், 4 வீரர்களும் உயிரிழந்துள்ளனர்.
ஜம்மு காஷ்மீரில் பூஞ்ச் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே இந்த துப்பாக்கிச் சூடு இடம் பெற்றுள்ளது.
துப்பாக்கிச் சூட்டில் ஒரு பயங்கரவாதி கொல்லப்பட்டுள்ளார்.
மேலும் பதுங்கியுள்ள தீவிரவாதிகளை கைது செய்ய குறித்த பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
சூரன்கோட் பகுதிக்கு அருகே உள்ள கிராமத்தில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக வந்த தகவலை அடுத்து தேடுதல் வேட்டை நடத்தப்பட்டதாக பாதுகாப்புத்துறை செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.