ஜம்மு காஸ்மீர் பகுதியில் காணப்பட்ட பாகிஸ்தானின் நவீன ஆளில்லா விமானத்தை சுட்டு வீழ்த்தியுள்ளதாக இந்தியா தெரிவித்துள்ளது.
ஜம்மு காஸ்மீர் எல்லையில் காணப்பட்ட பாகிஸ்தானின் குவாட்கொப்டர் வகையிலான சீனாவில் தயாரிக்கப்பட்ட ஆளில்லா விமானத்தையே சுட்டு வீழ்த்தியுள்ளதாக இந்திய இராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்திய எல்லைக்குள் ஊடுருவதற்கும்,தனது விசேட படைப்பிரிவுகளை பயன்படுத்தி இந்திய படையினரின் நிலைகளின் மீது தாக்குதலை மேற்கொள்வதற்கும் பாகிஸ்தான் இராணுவத்தினர் திட்டமிட்டுள்ளனர் என வெளியான தகவல்களை தொடர்ந்து இந்திய இராணுவம் உசார் நிலையில் உள்ள தருணத்திலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பனிப்பொழிவு காரணமாக எல்லையில் இந்தியாவிற்குள் ஊடுருவுவதற்கான பாதைகள் மூடப்படுவதற்கு முன்னதாக தீவிரவாதிகளை இந்தியாவிற்குள் அனுப்புவதற்கான நடவடிக்கைகளில் பாகிஸ்தான் இராணுவம் ஈடுபட்டுள்ளது என இந்திய இராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.