(Photo: Amit Shah /Twitter)
2024ஆம் ஆண்டிலும் மோடிதான் பிரதமராவார் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
அத்தோடு, பிரதமர் மோடி மக்கள் சேவைக்கு வந்து 20 ஆண்டுகள் நிறைவடையும் நிலையில், உலகில் எந்த ஒரு தலைவரும் இது போன்றதொரு சாதனையைச் செய்ததில்லை எனவும் அமித்ஷா புகழாரம் சூட்டியுள்ளார்.
காந்தி நகரில் மாவட்டத்தில் உள்ள பான்சர் நகரில் நேற்று (08) நடந்த நிகழ்வொன்றில் கலந்து கொண்டு பேசுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இத்தனை நீண்ட காலமாக ஒரு தலைவர் தொடர்ந்து மக்களால் சேவை செய்ய தேர்ந்தெடுக்கப்படுவது எங்கும் பார்க்க முடியாது எனவும் அமித்ஷா கூறியுள்ளார்.
அதனால், 2001 ஆம் ஆண்டு ஒக்டோபர் 7 ஆம் திகதி குஜராத் முதல்வராக பதவியேற்ற மோடி, தற்போது நாட்டில் பிரதமராக இருக்கிறார்.
அதேபோல், 2024 ஆம் ஆண்டிலும் பிரதமராக மோடியே தேர்ந்தெடுக்கப்படுவார் என அமித்ஷா குறிப்பிட்டுள்ளார்.
மேலும், 60 கோடி மக்களுக்கு வங்கிக் கணக்கு, 10 கோடி கழிவறைகள், 5 கோடி மக்களுக்கு மின்சாரம் ஆகியவற்றை மோடி அரசு வழங்கியுள்ளது எனவும் சுட்டிக்காட்டியுள்ளார் மத்திய அமைச்சர் அமித் ஷா.
காங்கிரஸ் அரசு கடந்த 70 ஆண்டுகளில் செய்ததை மோடி தலைமையிலான அரசு கடந்த 7 ஆண்டுகளில் செய்துள்ளதாகவும் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
महिला SHG द्वारा गांधीनगर रेलवे स्टेशन पर दिए जाने वाली कुल्हड़ की चाय से न सिर्फ पर्यावरण को लाभ होगा बल्कि सदियों पुरानी इस कला को बल मिलेगा व इससे जुड़े परिवारों को आर्थिक सहायता भी मिलेगी। यहाँ आने वाले यात्रियों से अनुरोध है कि इन मिट्टी के कुल्हड़ में चाय का आनंद अवश्य लें। pic.twitter.com/qV9MBmJb7m
— Amit Shah (Modi Ka Parivar) (@AmitShah) October 8, 2021