April 30, 2025 21:02:42

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘தமிழக முகாம்களில் இருந்த 65 இலங்கைத் தமிழர்கள் கனடாவுக்கு தப்பிச் சென்றுள்ளனர்’

தமிழக முகாம்களில் இருந்து 65 இலங்கைத் தமிழர்கள் வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் இலங்கைத் தமிழர் அகதி முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த முகாம்களில் இலங்கையிலிருந்து யுத்த காலத்தில் பல்வேறு காலகட்டங்களில் அகதிகளாக தஞ்சம் தேடி வந்த மக்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், இந்த முகாம்களில் இருந்த 65 தமிழர்கள் சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்கு தப்பிச்சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதுதொடர்பாக தமிழக பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவு விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இந்நிலையில், இலங்கைத் தமிழர்கள் தொடர்பான கணக்கெடுப்பும் அண்மையில் நடைபெற்றுள்ளது.

குறித்த 65 பேரும் தமிழகத்தில் இருந்து சட்டவிரோதமாக படகு மூலம் வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்றுள்ளனர்.

தமிழகத்தில் இருந்து கேரளா சென்று, அங்கிருந்து படகு மூலம் கனடாவுக்கு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சர்வதேச பொலிஸாரின் உதவியுடன் தமிழக பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.