January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

”வதந்திகளை நம்ப வேண்டாம்”: நடிகை சமந்தா

சமீபத்தில் தனது விவாகரத்தை அறிவித்த நடிகை சமந்தா, தற்போது தன்னைப் பற்றி வெளியாகும் வதந்திகளை நம்ப வேண்டாம் என ஒரு அறிக்கையை வெளியிட்டிருக்கிறார்.

அதில், தான் குழந்தை பெற்றுக் கொள்ள விரும்பவில்லை ,கருக்கலைப்பு செய்ததாக வெளிவரும் வதந்திகளை நம்ப வேண்டாம் என சமந்தா கேட்டுக் கொண்டுள்ளார்.

சமந்தா விவாகரத்துக்குப்பிறகு வேறொருவரை காதலித்து வருவதாகவும், குழந்தைப் பெற்றுக்கொள்ள சம்மதிக்கவில்லை என்றும் தொடர்ந்து வதந்தி பரவி வந்தது.

இதற்கு, முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக சமந்தா தனது டுவிட்டர் பக்கத்தில், வதந்திகளை நம்ப வேண்டாம் என அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.

அந்த அறிக்கையில் தனக்கு ஆதரவு தெரிவித்த அனைவருக்கும் நன்றி என சமந்தா குறிப்பிட்டிருக்கிறார்.

”விவாகரத்து என்பது வலிமிகுந்தது, இதிலிருந்து மீண்டுவர எனக்கு நேரம் தேவைப்படுகிறது” என அவர் தெரிவித்திருக்கிறார்.

”தான் ஒரு சந்தர்ப்பவாதி, வேறு ஒருவருடன் தொடர்பில் இருக்கிறேன், குழந்தைப் பெற்றுக்கொள்ள விரும்பவில்லை, கருக்கலைப்பு செய்துள்ளேன் போன்ற பல்வேறு வதந்திகளைப் பரப்பி வருகின்றனர்” என்று குறிப்பிட்டுள்ளார்.

என் மீதான இந்த தனிப்பட்ட தாக்குதல்கள் தொடரத்தான் செய்யும். ஆனால், இனியும் இவ்வாறான வதந்திகள் வேண்டாம் என சமந்தா கேட்டுக்கொண்டுள்ளார்.

யாரென்ன தூற்றினாலும் எதுவும் தன்னை தாக்காது என சமந்தா அந்த அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறார்.

2017 ஆம் ஆண்டு ,தமிழ், தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான சமந்தா, தெலுங்கு நடிகர் நாக சைதன்யா இருவரும் காதலித்து திருமணம் செய்துகொண்டனர்.

இந்நிலையில் தனிப்பட்ட காரணங்களால், கடந்த 2 ஆம் திகதி ,நீண்ட ஆலோசனைக்கு பிறகு தானும், நாக சைதன்யாவும் கலந்து பேசி திருமண வாழ்க்கையில் இருந்து பிரிந்து செல்ல முடிவு செய்துள்ளோம் என்று அதிகாரபூர்வமாக விவாகரத்து குறித்து அறிவித்திருந்தனர்.