இந்தியாவின் மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி இன்று சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்றுக்கொண்டார்.
பவானிப்பூர் தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற முதல்வர் மம்தா பானர்ஜி உட்பட 3 பேர் ஆளுநர் முன்னிலையில் பதவியேற்றனர்.
மேற்கு வங்காளத்தில் கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் 8 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெற்றது.
இதில் மம்தா பானர்ஜியின் கட்சி திரிணாமுல் காங்கிரஸ் அமோக வெற்றி பெற்ற போதும், மம்தா நந்தி கிராமம் தொகுதியில் தோல்வியடைந்தார்.
இருந்தாலும் அவர் முதல்வராக பதவியேற்றுக் கொண்டார்.
இதனால் ஆறு மாதத்திற்குள் சட்டமன்ற உறுப்பினராக வேண்டும் என்ற நிலை ஏற்பட்டது.
இந்த நிலையில் பவானிபூர் இடைத்தேர்தல் கடந்த 30 ஆம் திகதி நடைபெற்றது.
இதில் மம்தா பானர்ஜி போட்டியிட்டதுடன் கடந்த 3 ஆம் திகதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.
இதில் பா.ஜ.க வேட்பாளர் பிரியங்காவை 58 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் மம்தா பானர்ஜி தோற்கடித்தார்.
அதன்படி இன்றையதினம் அவர் சட்டமன்ற உறுப்பினராக பதவி ஏற்றுக் கொண்டார்.
#MamataBanerjee takes oath as MLA of #Bhawanipore in #WestBengal assembly. pic.twitter.com/g44IME7TEl
— Arka Sana (@SanaArka) October 7, 2021