January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

வெளிநாடு வாழ் தமிழர்களுக்காக ‘புலம்பெயர் தமிழர் நல வாரியம்’

எங்கே தமிழர்கள் வாழ்ந்தாலும், அவர்களுக்கு தமிழ்நாடுதான் தாய்வீடு என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அவர்கள் மீது அன்பு செலுத்துவது மட்டுமல்ல, அரவணைப்பதும் பாதுகாப்பதும் தாய்த்தமிழ்நாட்டின் கடமையாகும் எனவும் கூறியுள்ளார்.
புலம்பெயர் தமிழர் நலத் திட்டங்களுக்காக 20 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும் எனவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் . தெரிவித்துள்ளார்.
புலம்பெயர் தமிழர் நலநிதி என மாநில அரசின் 5 கோடி ரூபாய் முன்பணத்தைக் கொண்டு நலவாரியம் உருவாக்கப்படும் என தமிழக முதல்வர் தெரிவித்துள்ளார்
இதன்படி புலம்பெயர் தமிழர் குறித்த தரவு தளம் ஏற்படுத்தப்படும். இவ்வாரியத்தில் பதிவு செய்பவர்களுக்கு விபத்து, ஆயுள் காப்பீடு திட்டம் மற்றும் மருத்துவ காப்பீடு திட்டம் அடையாள அட்டையுடன் வழங்கப்படும் என்று அவர் கூறியுள்ளார்.
வெளிநாட்டிற்குச் செல்லும் குறைந்த வருவாய் பிரிவைச் சேர்ந்த தமிழர்கள் பணியின்போது இறக்க நேரிட்டால் அவர்களின் குழந்தைகளுக்கு கல்வி, திருமண உதவித் தொகை வழங்கப்படும்
எனவும் முதல்வர் தெரிவித்துள்ளார்.
வெளிநாடு செல்பவர்களுக்கு புத்தாக்க பயிற்சியானது இராமநாதபுரம், புதுக்கோட்டை, குமரி, தஞ்சாவூர், பெரம்பலூர், சிவகங்கை மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் நடத்தப்படும்.