தமிழகத்தில் நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தலில் தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் போட்டியிடுவோருக்காக அந்த இயக்கத்தின் நிர்வாகிகள் வாக்கு சேகரித்து வருகின்றனர்.
விஜய்யின புகைப்படத்துடன் கூடிய பதாகைகள், போஸ்டர்களுடன் இவர்கள் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
தளபதி விஜய் அரசியலுக்கு வருவாரா இல்லையா என்பது ஒருபுறமிருக்க, இந்த உள்ளாட்சி தேர்தலில் தனது மக்கள் மன்ற நிர்வாகிகளை களமிறக்கி இருப்பது எதற்கான ஆரம்பப்புள்ளி என அரசியல் விமர்சகர்கள் ஆராயத் தொடங்கியுள்ளனர் .
முன்னர் நடிகர் விஜய் அரசியலுக்கு வரப்போவதில்லை என்ற செய்தியும் வெளியானது.
இந்நிலையில் தற்போது உள்ளாட்சி தேர்தலில் தனது மக்கள் மன்ற நிர்வாகிகளை அவர் போட்டியிட வைத்திருப்பது எதற்கான அத்திவாரம் என கேள்விகள் எழுகின்றன.