May 23, 2025 19:51:13

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

உத்தரப் பிரதேசத்தில் விவசாயிகள் போராட்டத்தில் வன்முறை: 8 பேர் பலி!

இந்தியாவின் உத்தரபிரதேசத்தில் விவசாயிகள் போராட்டத்தில் இடம்பெற்ற வன்முறையில் 8 விவசாயிகள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து உத்தரப் பிரதேசத்தில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர் .

இந்நிலையில் விவசாயிகளின் போராட்ட கூட்டத்திற்குள் மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் பயணித்த கார் வேகமாக வந்து மோதியதில் 2 விவசாயிகள் உயிரிழந்துள்ளதாக விவசாய அமைப்புகள் தெரிவித்துள்ளது.

இந்த சம்பவத்தை அடுத்து அந்தப் பகுதியில் வன்முறை ஏற்பட்டுள்ள நிலையில் அதில் ஏற்பட்ட 8 பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த சம்பவத்தின் போது பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டிலேயே அதிகமானோர் இறந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் இந்த சம்பவத்திற்கு ராகுல் காந்தி கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

உத்தரப் பிரதேசத்தில் நிகழ்ந்திருப்பது மனிதத்தன்மையற்ற படுகொலை என அவர் சாடியுள்ளார்.

”உத்தரபிரதேச விவசாயிகள் போராட்டத்தில் மனிதத்தன்மையற்ற படுகொலை நிகழ்ந்திருப்பதை கண்ட பின்பும் ஒருவர் அமைதி காத்தால் அவர் செத்துப்போனதற்குச் சமம்” என ராகுல் காந்தி காட்டமாக தெரிவித்துள்ளார்.