July 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

மேற்குவங்கம் பவானிபூர் தொகுதி இடைத்தேர்தலில் மம்தா பானர்ஜி வெற்றியடைந்தார்

இந்தியாவின் மேற்குவங்கம் மாநிலம் பவானிபூர் தொகுதி இடைத்தேர்தலில் முதலமைச்சர் மம்தா பானர்ஜி வெற்றி பெற்றுள்ளார்.

பாஜக வேட்பாளர் பிரியங்கா திப்ரிவாலை விட 58,832 வாக்குகள் அதிகம் பெற்று மம்தா பானர்ஜி வெற்றியடைந்துள்ளார்.

கடந்த ஏப்ரல், மே மாதங்களில் மேற்கு வங்காளத்தில் நடந்த சட்டப்பேரவை தேர்தல்களில் திரிணமூல் காங்கிரஸ் வெற்றி பெற்றிபோதும், அதன் தலைவர் மம்தா பானர்ஜி நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.

எனினும் அவர் முதல்வராக பதவியேற்ற நிலையில் 6 மாதத்திற்குள் பேரவை உறுப்பினராக வேண்டிய நிலை ஏற்பட்டது.

இந்நிலையில் பவானிபூர் தொகுதியில் வென்ற திரிணமூல் உறுப்பினர் ராஜினாமா செய்த நிலையில் அங்கு இடைத்தேர்தலில் மம்தா போட்டியிட்டார். அதற்கான வாக்கெடுப்பு செப்டம்பர் 30 ஆம் திகதி நடைபெற்றது.

இதில் வென்றால் மட்டுமே மம்தா பானர்ஜி முதல்வர் பதவியில்  நீடிக்க முடியும் என்ற நிலை இருந்தது.

இந்நிலையில் இன்று வெளியான தேர்தல் முடிவுகளில் பவானிபூர் தொகுதி மக்களின் அமோக ஆதரவோடு வெற்றி பெற்று மேற்குவங்க முதலமைச்சர் பதவியை தக்க வைத்துக் கொண்டுள்ளார்.