மகாத்மா காந்தியின் 152 ஆவது பிறந்தநாளை ஒட்டி, இந்தியாவின் லடாக் பகுதியில் மிகப்பெரிய தேசியக் கொடி பறக்கவிடப்பட்டது.
காந்திக்கு மரியாதை செய்யும் வகையில் முழுக்க கதர் துணியால் இந்த தேசியக் கொடி நெய்யப்பட்டுள்ளது.
இந்த கொடியை பறக்கவிடும் போது, வீரவணக்கம் செலுத்தும் வகையில் ஏராளமான ராணுவ ஹெலிகாப்டர்கள் அந்தப் பகுதியை சுற்றி வலம் வந்தன.
இந்திய ராணுவத்தின் பொறியாளர்களால் இந்த தேசியக்கொடி நெய்யப்பட்டுள்ளது. 1,000 கிலோ எடை கொண்ட இந்த தேசியக் கொடி 225 மீட்டர் நீளமும், 150 மீட்டர் அகலமும் கொண்டதாகும்.
உலகின் மிகப்பெரிய தேசியக் கொடியாக கருதப்படும் இது லடாக்கின் லே பகுதியில் பறக்கவிடப்பட்டது.
இந்திய ராணுவத் தலைமை தளபதி மனோஜ் முகுந்த் நராவனே முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், ஏராளமான இராணுவ வீரர்கள் பங்கேற்று மூவர்ணக் கொடியை பறக்கவிட்டனர்.