file photo
கிழக்கு லடாக் பிரதேசத்தில் இந்தியா மற்றும் சீனாவுக்கு இடையே எல்லைப் பிரச்சினை மீண்டும் அமைதியின்மையை ஏற்படுத்தியுள்ளது.
கிழக்கு லடாக் எல்லைப் பிரதேசங்களில் இரு நாடுகளுமே படைகளைக் குவித்துள்ளதாக தெரியவருகிறது.
குறித்த பிரதேசத்தில் சீனா இராணுவத்தையும் நவீன ஆயுதங்களையும் குவித்து, வருவதாக இந்திய வெளியுறவு அமைச்சு குற்றம்சாட்டியுள்ளது.
அதற்குப் பதிலாக தாமும் எல்லைப் பாதுகாப்பைப் பலப்படுத்தியதாக இந்தியா தெரிவித்துள்ளது.
எல்லைகள் தொடர்பான இணக்கப்பாட்டை சீனா தொடர்ந்தும் மீறி வருவதாக இந்திய வெளியுறவு அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
இந்தியாவின் சட்ட விரோத எல்லை மீறல் நடவடிக்கைகளே அமைதியின்மைக்குக் காரணம் என்று சீனா பதிலளித்துள்ளது.