இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநில அரசின் விளம்பர தூதராக நடிகை கங்கனா ரனாவத் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
அதற்கமைய யோகி ஆதித்யநாத் தலைமையிலான உத்தரபிரதேச அரசின் சிறப்பு விளம்பர தூதராக கங்கனா ரனாவத் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ.க. ஆட்சி நடைபெற்று வருகிறது.
அங்கு தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பாஜகவின் மையப்புள்ளியாக இருக்கும் உத்திரப்பிரதேசத்தில் பொலிவுட் சினிமா நடிகையான கங்கனா ரனாவத் விளம்பர தூதராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
உத்தரப் பிரதேச அரசின் ‘ஒரு மாவட்டம் ஒரு தயாரிப்பு’ திட்டத்தின் விளம்பர தூதராக நடிகை கங்கனா ரனாவத் நியமிக்கப்பட்டுள்ளார்.
திடீரென ஒரு உச்சத்தில் இருக்கும் சினிமா நடிகையை அழைத்து அதுவும் யோகி ஆதித்யநாத் தலைமையிலான உத்தரபிரதேச அரசு, விளம்பரத் தூதராக நியமித்திருப்பது தற்போது பேசு பொருளாக மாறியுள்ளது.
உத்தரபிரதேச மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களிலும் உள்நாட்டு பொருட்களின் உற்பத்தியை மேம்படுத்துவதற்காக ‘ஒரு மாவட்டம் ஒரு தயாரிப்பு’ என்ற திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் பொலிவுட்டின் முன்னணி நடிகையான கங்கனா ரனாவத், முதல்வர் யோகி ஆதித்யநாத்தை சந்தித்து பேசியுள்ளார்.
அப்போது ராமர் கோவிலின் பூமி பூஜையில் பயன்படுத்தப்பட்ட நாணயத்தை கங்கனாவுக்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் பரிசளித்துள்ளார்.
இதன்போது, ‘தேஜஸ்’ படப்பிடிப்பின் ஒத்துழைப்புக்காக உத்தரபிரதேச அரசுக்கு நன்றி தெரிவிக்க முதல்வரை சந்தித்ததாக கங்கனா ரனாவத் தெரிவித்துள்ளார்.
அதேநேரம் ‘மகாராஜ் ஜி தங்கள் ஆட்சி தொடரட்டும்’ என கூறியுள்ளதுடன், வரவிருக்கும் தேர்தல்களில் முதல்வர் யோகி ஆதித்யநாத் வெற்றி பெற நல்வாழ்த்துகள் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
Kangana Ranaut becomes Brand Ambassador for @UP_ODOP 🥰🥰🥰🥰#KanganaRanaut
Thank you @aryanrajput21 ji for Sharing this beautiful news before today…. pic.twitter.com/2bXcpSwcVe
— Kangana Trend (@kangana_ranauta) October 1, 2021