April 16, 2025 18:43:40

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

“சீறும் புலி பாயும் விரைவில்”: நடிகர் பாபி சிம்ஹா

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் வாழ்க்கையை சித்தரிக்கும் ‘சீறும் புலி’ திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.

இந்தப் படத்தில் பிரபல தென்னிந்திய நடிகர் பாபி சிம்ஹா பிரபாகரனின் கதாபாத்திரத்தில் நடிக்கின்றார்.

நீலம், லைட்மேன், உனக்குள் நான் உள்ளிட்ட திரைப்படங்களை வழங்கிய இயக்குனர் ஜி.வெங்கடேஷ் குமார் இந்தப் படத்தையும் இயக்கி வருகின்றார்.

2018-ஆம் ஆண்டு இந்தப் படம் பற்றிய அறிவிப்பு வெளியாகியிருந்தது. “சீறும் புலி பாயும் விரைவில்” என்று நடிகர் பாபி சிம்ஹா தனது டுவிட்டர் பக்கத்தில் இன்று செய்தி வெளியிட்டுள்ளார்.

‘சீறும் புலி’ இரண்டு பாகங்களாக இயக்கப்படுவதாக இயக்குனர் ஜி.வெங்கடேஷ் குமார் ஆரம்பத்தில் தெரிவித்திருந்தார்.

படத்தின் முதல் பாகத்தில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் ஆரம்பம், மாணவர் பருவம், அவர் எவ்வாறு ஒரு கிளர்ச்சி இயக்கத்தின் தலைவராகின்றார் என்ற பகுதிகளும், இரண்டாம் பாகத்தில் தமிழீழத்துக்கான போர் வரலாறும் உள்ளடக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

விடுதலைப் புலிகளின் இராணுவ சீருடையில் பாபி சிம்ஹா அமர்ந்து, அருகில் புலியின் தலையில் கை வைத்துள்ளதைப் போன்று வெளியாகியுள்ள முதல் போஸ்டர் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

https://twitter.com/actorsimha/status/1319868698279096320