January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

தமிழகம் மற்றும் புதுச்சேரி உள்ளாட்சி தேர்தலில் களமிறங்கும் விஜய் மக்கள் இயக்கம்!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடைபெறவுள்ள உள்ளாட்சி தேர்தலில் தளபதி விஜயின் மக்கள் இயக்கம் சார்பில் வேட்பாளர்கள் போட்டியிடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட ஒன்பது மாவட்டங்களுக்கு இரண்டு கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடைபெற இருக்கின்றது.

தமிழக உள்ளாட்சி தேர்தலில் நடிகர் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் 169 பதவிகளுக்கு வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அதில் 12 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 157 பேர் களத்தில் இருப்பதாகவும் இவர்களுக்கு ஆதரவாக விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் 10 ஆண்டுகளுக்குப் பிறகு உள்ளாட்சித் தேர்தல் வர இருப்பதால் இந்த தேர்தலிலும் விஜய் மக்கள் இயக்கத்தினர் போட்டியிட இருக்கின்றனர்.

விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச்செயலாளரான புஸ்ஸி ஆனந்த் புதுச்சேரியைச் சேர்ந்தவர் எனவும், அவர் நடிகர் விஜய்க்கு மிகவும் நெருக்கமானவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் புதுச்சேரியில் உள்ளாட்சித் தேர்தலில் விஜய் மக்கள் இயக்த்தினர் போட்டியிட நடிகர் விஜய் சம்மதம் தெரிவித்துள்ளதாக சொல்லப்படுகிறது.

புதுச்சேரியில் உள்ளாட்சித் தேர்தலில் விஜய் பெயரையும், கொடியையும் பயன்படுத்த இருப்பதாகவும் புதுச்சேரி உள்ளாட்சித் தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் முக்கிய பங்கு வகிக்கும் எனவும் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.