July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

13, 165 கோடி ரூபாய்க்கு ஹெலிகாப்டர், ஏவுகணைகளை கொள்முதல் செய்யும் இந்தியா!

பாதுகாப்பு படைகளை வலுப்படுத்த 13,165 கோடி ரூபாய் மதிப்பிலான ஹெலிகாப்டர்கள், ஏவுகணைகள், பீரங்கிகள், வெடிபொருட்களை கொள்வனவு செய்ய இந்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இந்திய பாதுகாப்பு படைகளை வலுப்படுத்தும் நோக்கில் இவற்றை இந்திய அரசு கொள்முதல் செய்யவுள்ளது.

இந்தக் கொள்முதல் திட்டத்துக்கு பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையிலான இராணுவ கொள்முதல் கவுன்சில் (DAC) ஒப்புதல் வழங்கியுள்ளது.

இதில் 11,486 கோடி ரூபாய் மதிப்பிலான தளபாடங்கள், ஆயுதங்கள் உள்நாட்டு நிறுவனங்களிடமிருந்து கொள்முதல் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

குறிப்பாக 25 அதிநவீன இலகு ரக மார்க் 3 ஹெலிகாப்டர்கள் ஹிந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனத்திடமிருந்து கொள்முதல் செய்யப்படவுள்ளது.

மேலும், உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட, பல திசைகளிலும் சுழலக் கூடிய இரட்டை எஞ்சின் கொண்ட இந்த மார்க் 3 ஹெலிகாப்டர்கள் 3,850 கோடி ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்படவுள்ளதுடன் 4,962 கோடி ரூபாய் பெறுமதியிலான ரொக்கெட் வெடிகுண்டுகள் உள்நாட்டு நிறுவனங்களிடமிருந்து வாங்கப்படவுள்ளது.

இவற்றில் 1700 கோடி ரூபாய் மதிப்பிலான ஏவுகணைகள், 1,300 கோடி ரூபாய் மதிப்பிலான 155மிமீ பீரங்கி வெடிகுண்டுகள் கொள்முதல் செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

இதேவேளை இந்தியா திடீரென ஹெலிகாப்டர் உள்ளிட்ட போர் தளபாடங்களை வாங்குவது, எல்லைப் பகுதியில் பதற்றத்தை தணிக்கும் வகையில் பாதுகாப்பு படைகளை வலுப்படுத்த பெரிதும் உதவும் என தெரிகிறது.