November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

நள்ளிரவில் கரையைக் கடந்தது ‘குலாப்’ சூறாவளி

வங்கக் கடலில் உருவான குலாப் சூறாவளி, இந்தியாவின் ஆந்திரா மாநிலம் கலிங்கப்பட்டினம், ஒடிசாவின் கோபால்பூருக்கு இடையே கரையை கடந்ததாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதனால் கலிங்கப்பட்டினத்தை சுற்றியுள்ள பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருவதாக கூறப்படுகிறது.

குலாப் சூறாவளி கரையை கடந்தபோது 95 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசியுள்ளது.

இந்நிலையில் நேற்று இரவு ஆந்திராவின் கலிங்கப்பட்டினத்தில் இருந்து 25 கிலோ மீட்டர் தொலைவில் வட திசையில் சூறாவளி கரையை கடக்க தொடங்கியது.

அந்த மாநிலத்தின் தாழ்வான பகுதிகளில் இருந்து மக்களை மீட்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.