January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

தமிழகத்தில் பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட விபத்தில் ஐந்து பெண்கள் பலி

விருதுநகர் மாவட்டம் எரிச்சநத்தம் அருகே பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் ஐந்து பெண்கள் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர்.

15 ரக பட்டாசுகள் தயாரிக்கப்பட்டு வரும் தொழிற்சாலையொன்றில் பட்டாசுகளுக்கு திரி வைக்கும் போது உராய்வு ஏற்பட்டு வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது.

இதன்போது தொழிற்சாலையின் இரு அறைகள் முற்றாக எரிந்து தீக்கிரையாகியுள்ள அதேவேளை,இந்த சம்பவத்தில் சிக்கி ஐந்து பெண்கள் உயிரிழந்துள்ளனர்.
மேலும் பல பெண் தொழிலாளர்கள் கடும் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர்.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசுகளை தயாரிப்பது தீவிரமாக இடம்பெற்றுவரும் நிலையிலேயே இந்த வெடிவிபத்து இடம்பெற்றுள்ளது.

பலியானவர்களின் குடும்பத்தினருக்கு தலா இரண்டு லட்சம் ரூபாய் நிதி உதவியை வழங்கவுள்ளதாக அறிவித்துள்ள தமிழக முதல்வர், விசாரணைக்கும் உத்தரவிட்டுள்ளார்.