பேரறிவாளனின் உடல்நிலையை கருத்தில் கொண்டு அக்-26 வரை பரோல் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
பேரறிவாளனுக்கு மருத்துவ சிகிச்சைக்காக ஐந்தாவது முறையாக தமிழக அரசு பரோல் நீட்டித்து உத்தரவிட்டுள்ளது.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றுள்ள பேரறிவாளன், சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
மருத்துவ சிகிச்சை பெறுவதற்காக அவரை பரோலில் விடுவிக்க வேண்டும் என்று, பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தார்.
இதனை ஏற்று, கடந்த மே மாதம் பேரறிவாளன் 30 நாள் பரோலில் விடுவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
பேரறிவாளனுக்கு தொடர் மருத்துவ சிகிச்சை தேவைப்பட்டதால் கடந்த ஜூன், ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் மூன்று முறை பரோல் நீட்டிப்பு தமிழக அரசால் வழங்கப்பட்டது .
இந்நிலையில், பேரறிவாளனின் உடல் நிலையை கருத்தில் கொண்டு, அவருக்கு 5 வது முறையாக 30 நாட்களுக்கு பரோல் நீட்டிப்பு வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது.
பேரறிவாளன் சிறுநீரக தொற்று காரணமாக விழுப்புரம் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.