July 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இந்திய பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்கா பயணமானார்

இந்திய பிரதமர் நரேந்திர மோடி இன்று அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார்.

அமெரிக்காவில் நடைபெறும் இரண்டு முக்கிய நிகழ்வுகளில் கலந்துகொள்வதற்காக அவர் அங்கு புறப்பட்டுச் சென்றுள்ளார்.

அமெரிக்கா புறப்படுவதற்கு முன் பிரதமர் மோடி தனது பயணம் குறித்து டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டிருக்கிறார் அதில் , ”தனது அமெரிக்க பயணத்தின் மூலம் , விரிவான உலகளாவிய கட்டமைப்பை வலுப்படுத்த முடியும்” என குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் ”முக்கிய கூட்டணி நாடுகளான ஆஸ்திரேலியா மற்றும் ஜப்பான் நாடுகளுடன் உறவுகளை வலுப்படுத்தவும், உலகளாவிய பிரச்சனைகளுக்கு தீர்வு காணவும் இது ஒரு வாய்ப்பாக அமையும்” எனவும் பிரதமர் மோடி டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

அமெரிக்கா செல்லும் பிரதமர் மோடி செப்டம்பர் 24 ம் திகதி அமெரிக்க அதிபர் ஜோ பைடனை சந்திக்க உள்ளார். அப்போது ஆப்கானிஸ்தானில் சமீபத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் குறித்து இரு தலைவர்களும் விவாதிப்பார்கள் எனத் தெரிவிக்கப்படுகின்றது. அதேபோல் அங்கு கமலா ஹாரிஸையும் பிரதமர் சந்தித்துப் பேசவுள்ளார்.

குவாட் தலைவர்கள் நேரடியாக பங்கேற்கும் முதல் உச்சி மாநாடு அமெரிக்காவில் அதிபர் ஜோ பைடன் தலைமையில் வரும் 24ஆம் திகதி நடைபெறவுள்ளது.

இந்த மாநாட்டில் இந்திய பிரதமர் மோடி, அவுஸ்திரேலிய பிரதமர் ஸ்கார்ட் மோரிஸ் மற்றும் ஜப்பான் பிரதமர் யோஷிஹைட் சூகா ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர்.

இந்த குவாட் மாநாட்டில் கொரோனா வைரஸ், பருவநிலை மாற்றம் உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து தலைவர்கள் விவாதிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

முக்கியமான ஆப்கானிஸ்தானில் தற்போது ஏற்றுள்ள அரசியல் மாற்றம் குறித்து முக்கிய விவாதம் இடம் பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை அடுத்து இந்திய பிரதமர் மோடி 25 ஆம் திகதி ஐ.நா.பொதுசபைக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றவுள்ளார்.