உலகமே தமிழகத்தை நோக்கி வந்தாக வேண்டும் என ‘ஏற்றுமதியில் ஏற்றம்- முன்னணியில் தமிழ்நாடு’ என்ற மாநாட்டில் உரையாற்றும் போது, தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
‘மொத்தத்தில் தமிழகத் தொழில்துறையின் உள்ளங்கையில் உலகம் இருக்க வேண்டும்’ என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
“மேட் இன் இந்தியா” என்ற கருத்தியலைப் போன்று ‘மேட் இன் தமிழ்நாடு’ என்ற வகையில் இனி நாம் பொருட்களை உற்பத்தி செய்ய வேண்டும் என தொழில் துறையினர் மத்தியில் தமிழக முதலமைச்சர் உரையாற்றியுள்ளார்.
இந்த மாநாட்டில் தமிழ் நாட்டிற்கான ஏற்றுமதிக் கொள்கையையும் முதலமைச்சர் வெளியிட்டு வைத்துள்ளார்.
ஏற்றுமதியாளர்கள் மற்றும் முதலீட்டாளர்களுக்கு அனைத்து ஆதரவுகளையும் தமிழக அரசு வழங்கும் என முதலமைச்சர் உறுதி அளித்துள்ளார்.
தமிழ்நாட்டின் தனித்தன்மையான பொருட்களுக்கு உலக அளவில் நல்ல வரவேற்பு உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
வியாபாரிகள் இனி உலக வர்த்தக சந்தையின் சூழலுக்கேற்ப மதிப்புக்கூட்டு பொருட்களை உற்பத்தி செய்ய வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இந்திய ஏற்றுமதியில் சிறந்த மாநிலங்களுக்கான பட்டியலில், 1.93 இலட்சம் கோடி ரூபாய் பெறுமதியான ஏற்றுமதிகளுடன் தமிழ்நாடு 3 ஆவது இடத்தில் இருப்பதாக தமிழக முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
“தொழில்துறையிலும் அகில இந்திய அளவில் தமிழகத்தின் பங்களிப்பு 8.97 வீதமாக இருக்கிறது. மோட்டார் வாகன உற்பத்தியில் தமிழ்நாடு முன்னிலையில் இருக்கிறது.
ஆடை மற்றும் அணிகலன் ஏற்றுமதியில் 58மூ, காலணி ஏற்றுமதியில் 45மூ, மின் சாதனங்களின் ஏற்றுமதியில் 25மூ பங்களிப்பு என தமிழகம் முன்னோக்கி வருவது பெருமையாக இருக்கிறது.
இந்த முன்னேற்றமும் வெற்றியும் ஒவ்வொரு தமிழனின் உழைப்புக்கும் கிடைத்த வெற்றியாகும்” என்று தமிழக முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.