July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

தமிழகத்தின் முக்கிய சுற்றுலாத் தலமான மாமல்லபுரம் சென்றார் புதிய ஆளுநர்!

தமிழகத்தின் புதிய ஆளுநராக பொறுப்பேற்ற ஆர்.என். ரவி தனது குடும்பத்தினருடன் மாமல்லபுரம் சென்று கடற்கரை கோயிலைப் பார்வையிட்டார்.

தமிழ்நாட்டின் ஆளுநராக இருந்த பன்வாரிலால் புரோஹித் பஞ்சாப் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டதையடுத்து, ஆர்.என். ரவி புதிய ஆளுநராக நேற்றையதினம் பதவியேற்றுக் கொண்டார்.

இதையடுத்து குடும்பத்துடன் மாமல்லபுரம் கடற்கரை கோயிலுக்குச் சென்ற அவர், புராதன சிற்பங்களைப் பார்வையிட்டுள்ளதுடன் அங்கு முக்கிய இடங்களை சுற்றிப் பார்த்த பின் ஆளுநர் மாளிகை திரும்பினார்.

தமிழகத்தின் புதிய ஆளுநர்  வருகையை ஒட்டி மாமல்லபுரம் கடற்கரைப் பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப் பட்டிருந்தது.

தமிழகத்தின் முக்கிய சுற்றுலாத் தலமாகவும் பல்லவர்கால குகை சிற்பங்கள் நிறைந்த இடமாகவும் இருப்பது மகாபலிபுரம் என அழைக்கப்படும் மாமல்லபுரம்.

தமிழகத்தின் புதிய ஆளுநர் என்று முதல்முறையாக குகைக் கோயில்கள், சிற்பங்கள் ,பாரம்பரிய சின்னங்கள் நிறைந்த மாமல்லபுரம் சென்றுள்ளார்.

இதற்கு முன்னர் கடந்த 2019ஆம் ஆண்டு இறுதியில் இந்தியாவிற்கு வருகை தந்த சீன அதிபர் ஜி ஜிங்பிங், சென்னையை அடுத்து கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள மாமல்லபுரத்தில் தான் இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்த பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.