January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘மதிப்பெண்ணும் தேர்வும் மட்டுமே வாழ்க்கை இல்லை’: நடிகர் சூர்யா வெளியிட்டுள்ள உருக்கமான வீடியோ

தற்கொலை தீர்வல்ல,மாணவர்கள் தன்னம்பிக்கையுடன் இருக்க வேண்டும் என நடிகர் சூர்யா உருக்கமான வீடியோவொன்றை தனது டுவிட்டர் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

தமிழகத்தில் நீட் தேர்வுக்கு பயந்து அடுத்தடுத்து 3 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டனர்.

இதனை அடுத்து மாணவர்களுக்கு தன்னம்பிக்கையூட்டும் வகையில் நடிகர் சூர்யா வீடியோவொன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் ‘ஒரு பரீட்சை உங்களோட உயிரை விட பெருசல்ல.மதிப்பெண், தேர்வு மட்டுமே வாழ்க்கை இல்லை, சாதிக்கிறதுக்கு அத்தனை விஷயங்கள் இருக்கு. எந்த ஒரு கவலையானாலும் சில காலத்துக்கு பிறகு குறைந்துவிடும் என்று குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு, தற்கொலை என்பது உங்களை விரும்புவோருக்கு நீங்கள் தரும் தண்டனை.தைரியமாக இருக்க வேண்டும் என நடிகர் சூர்யா மாணவர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.

மேலும், ‘மாணவ மாணவிகள் அனைவரும் வாழ்க்கையில் அச்சம் இல்லாமல் இருக்க வேண்டும்.

உங்களுக்கு மனம் கஷ்டமாக இருக்கிறது என்றால் உங்களுக்கு பிடித்தவர்கள், பெற்றோர்கள், நண்பர்கள் என யாரிடமாவது மனம் விட்டுப் பேசுங்கள் எனவும் சூர்யா  கேட்டுக் கொண்டுள்ளார்.

இதனிடையே தமிழக அரசின் சார்பில் நீட் தேர்வெழுதிய மாணவர்களின் மன உளைச்சலை போக்கும் வகையில் மனநல ஆலோசனை அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.