
(FilePhoto)
இந்தியாவில் ட்ரோன் தயாரிப்புக்கான மிகப்பெரிய அளவிலான திட்டத்தை மத்திய அரசு முன் வைத்துள்ளது.
அதற்கமைய ட்ரோன் மற்றும் ட்ரோன் பாகங்களுக்கான உற்பத்தி சார்ந்த ஊக்கத்தொகை திட்டத்தின் கீழ் அடுத்த 3 ஆண்டுகளில் 120 கோடி ரூபாய் வழங்கப்படுவதாகவும் இது ட்ரோன் துறையின் ஒட்டுமொத்த தயாரிப்பு அளவை விட ஒன்றரை மடங்கு அதிகமாகும் என விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிர் ஆதித்ய சிந்தியா தெரிவித்துள்ளார்.
அடுத்த 3 ஆண்டுகளில் 5,000 கோடி ரூபாய் மதிப்பிலான முதலீடுகள் செய்யப்பட்டு, 900 கோடி ரூபாய் முதலும், 10,000 வேலை வாய்ப்புகளும் உருவாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், 2030இற்குள் சர்வதேச ட்ரோன் மையமாக இந்தியாவை உருவாக்குவதே நோக்கமென்றும் ட்ரோன் சேவைகள் துறை அடுத்த 3 ஆண்டுகளில் 30,000 கோடி ரூபாய் எனும் அளவில் இது வளரும் என எதிர்பார்க்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை தற்சார்பு இந்தியா இலட்சியத்தை அடைவதற்கான மற்றுமொரு நடவடிக்கையாக, ஆளில்லாத குட்டி விமானங்கள் மற்றும் அவற்றின் உதிரி பாகங்களுக்கான உற்பத்தி சார்ந்த ஊக்கத்தொகை திட்டத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Drones offer tremendous benefits to many sectors of the economy like agriculture, mining, infrastructure, surveillance, defence, law enforcement etc. Drones can be significant creators of employment & economic growth owing to their reach, versatility & ease of use.#PLIforDrones pic.twitter.com/ZUL47q9pFr
— MoCA_GoI (@MoCA_GoI) September 16, 2021