November 21, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களின் மையமாக தமிழகம் உருவாகும்’: ஸ்டாலின்

தமிழகத்தில் தகவல் தொழில்நுட்பத்தில் சாதனையானது கருணாநிதியின் தொலைநோக்குப் பார்வைக்குக் கிடைத்த வெற்றி என தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

அதேநேரம், தொழில் செய்வதற்கு ஏற்ற மாநிலமாகவும் வளர்ச்சியை தரும் மாநிலமாகவும் தமிழகம் இருக்கும் என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

PAN IIT  இன் உலகளாவிய இரண்டு நாள் தொழில்நுட்ப மாநாடான ‘PIWOT’ நிகழ்வின் தொடக்க விழாவில், கலந்துகொண்டு பேசுகையிலே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

ஐ.ஐ.டி-க்கள் நமது வளர்ச்சியில் பெருமைப்படத்தக்க வகையில் பங்காற்றிருப்பதாகவும், அதிலும், சென்னை ஐ.ஐ.டி, தமிழக அரசுக்கு பல்வேறு விடயங்களில் உறுதுணையாக இருந்துள்ளதாகவும் ஸ்டாலின் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களின் மையமாக, தமிழகம் உருவாகும், பொருளாதாரத்தில் வேகமாக வளர்ந்துவரும் பிரிவுகளில் கவனம் செலுத்தி, அதன்மூலம் ஒரு ட்ரிலியன் டொலர் பொருளாதாரத்தை அடைய வேண்டும் என தான் விரும்புவதாக தமிழக முதலமைச்சர் கூறியுள்ளார்.

மொத்த உள்நாட்டு உற்பத்தியில் நாட்டிலேயே இரண்டாவது இடம் வகிப்பதுடன், தொழில் வளர்ச்சிமிக்க மாநிலங்களில் ஒன்றாகவும் தமிழகம் உள்ளது என ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

ஐ.டி. துறையைப் பொறுத்தவரையில், இந்தியாவில் இருந்து அதிகளவில் மென்பொருள் ஏற்றுமதி செய்யும் மாநிலங்களுள் ஒன்றாகவும் தமிழகம் திகழ்கிறது என முதலமைச்சர் மு க ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை மின்னணுப் பொருட்களைத் தயாரிப்பதில் இந்தியாவிலேயே இரண்டாம் இடத்தில் தமிழகம் இருக்கிறது  இத்தகைய சூழலால் புதுமையான சிந்தனையுடன் களமிறங்கும் தொழில்முனைவோர்களுக்கு ஏற்ற சிறந்த களமாகவும் தமிழகம் விளங்குகிறது.

கருணாநிதி 1997ஆம் ஆண்டே தகவல் தொழில்நுட்பக் கொள்கையை முதன்முதலில் தமிழகத்துக்கு வகுத்துக் கொடுத்ததாக ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

1996-2001 ஆட்சிக் காலத்திலேயே ‘நுஅpழறநச ஐவு’ என்ற நிகழ்ச்சியை ஆண்டுதோறும் நடத்தி, தகவல் தொழில்நுட்பத்தின் முக்கியத்துவத்தைப் பட்டிதொட்டிகள் எல்லாம் கொண்டு சென்றதாக சுட்டிக்காட்டியிருக்கிறார் ஸ்டாலின்.

தகவல் தொழில்நுட்பத்தில் இன்றைய சாதனை, கருணாநிதியின் தொலைநோக்குப் பார்வைக்குக் கிடைத்த வெற்றி என்றே சொல்ல வேண்டும் என தமிழக முதலமைச்சர் தெரிவித்திருக்கிறார்.