இந்தியா இராணுவ தளவாடங்களை ஏற்றுமதி செய்யும் நாடு என்ற புதிய இலக்கை நோக்கிச் சென்று கொண்டிருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்திருக்கிறார்.
உத்தரப்பிரதேசத்தில் அடுத்த வருடம் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அங்கு மேற்கொள்ளவுள்ள முக்கிய திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி இன்று அறிவித்திருக்கிறார்.
இதன்போது, உத்திரபிரதேசத்தில் இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் அலிகர் பகுதியில் பாதுகாப்பு துறைக்கான கருவிகளை உருவாக்கும் திட்டம் தொடங்கப்பட இருப்பதாக அவர் அறிவித்திருக்கிறார்.
இதேவேளை இந்தியா இராணுவ தளவாடங்களை இறக்குமதி செய்யும் நாடு என்ற அடையாளத்தை மாற்ற வேண்டும் எனவும் அவர் தெரிவித்திருக்கிறார்.
உலக அளவில் இந்தியாஈராணுவ தளவாடங்களை ஏற்றுமதி செய்யும் நாடு என்ற புதிய இலக்கை நோக்கி சென்று கொண்டிருப்பதாகவும் பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்திருக்கிறார்.
உத்தரபிரதேசத்தில் அடுத்த வருடம் நடைபெறவுள்ள தேர்தலில் முழுமையாக வெற்றி பெறுவதற்கு ஆளும் பாஜக தரப்பு பல வியூகங்களை வகுத்து வருவது குறிப்பிடத்தக்கது.