July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஹிந்தி மொழி தினத்தையொட்டி நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து!

ஹிந்தி தினத்தையொட்டி நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் (14) இந்தியாவில் ஹிந்தி மொழி தினம் கொண்டாடப்படுகிறது.

இந்தியாவில் முக்கிய அலுவல் மொழியாக ஹிந்தி மொழி காணப்படுவதுடன், உலக அரங்கில் ஹிந்தி வலுவான அடையாளத்தை உருவாக்கும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

மேலும், ஹிந்தி மொழியானது, உலக அரங்கில் உங்கள் அனைவரது முயற்சியினால் தொடர்ந்து வலுவான அடையாளத்தை உருவாக்கி வருகிறது என இந்திய பிரதமர் நரேந்திர மோடி டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு,ஹிந்தியை வளப்படுத்த பல்வேறு தரப்பு மக்களும் கணிசமான பங்களிப்பை அளித்தனர் என்றும், அது தொடர்ந்து மொழியின் நிலையை உறுதிப்படுத்துவதாகவும், ‘ஹிந்தி திவாஸ்’ அன்று உங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்’ என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 1949-ஆம் ஆண்டு செப்டம்பர் 14 ஆம் திகதி ஹிந்தி மொழி இந்தியாவின் ஆட்சி மொழியாக அறிவிக்கப்பட்டது. தேவநாகரி எழுத்து வடிவத்தில் இந்த ஹிந்தி மொழி எழுதப்படுகிறது.