January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

தமிழகத்தில் விடுபட்ட 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல்

ஊரக உள்ளாட்சி தேர்தல் எதிர்வரும் அக்டோபர் மாதம் 06 மற்றும் 09 ஆகிய திகதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெறும் என தேர்தல் ஆணையர் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் விடுபட்ட 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசி,வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் 2 கட்டங்களாக நடைபெறவுள்ளது.

6 மற்றும் 09 ஆம் திகதிகளில் நடைபெறும் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை 12 ஆம் திகதி நடைபெறும்.

ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் செப்டம்பர் 15 ஆம் திகதி தொடங்குகிறது.