
சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூர் சிறையில் தண்டனை அனுபவித்துவரும் சசிகலா இன்னும் ஒரு வாரகாலத்தில் விடுதலையாவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக அவரது சட்டத்தரணி ராஜா செந்தூர் பாண்டியன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் தெரிவித்துள்ளதாவது;
சசிகலா இன்னும் ஒரு வாரகாலத்தில் வெளியில் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன.
கர்நாடக மாநில சிறைவிதிகளின்படி அனைத்து கைதிகளும் நன்னடத்தை விதிகளின்படி ஒவ்வொரு மாதமும் 3 நாட்கள் தண்டனை குறைப்பு சலுகையை பெறமுடியும்.
சசிகலா 43 மாதகால சிறைவாசத்தை முடித்துள்ளார்.
43 மாதங்களுக்கு தலா மூன்று நாட்கள் வீதம் அவருக்கு 129 நாட்கள் தண்டனை குறைக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக அவர் ஒரு வாரகாலத்தில் வெளியில் வருவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளன. இது குறித்த அறிவிப்பு எவ்வேளையிலும் வெளியாகலாம் என தெரிவித்துள்ளார்.