ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகு, மீண்டும் மதுரை-இலங்கைக்கு இடையேயான விமான சேவை தொடங்கியுள்ளது.
அதற்கமைய தடுப்பூசி போட்டவர்கள் மட்டுமே விமானத்தில் பயணிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கொரோனா பரவலால் 2020 மார்ச் மாதல் முதல் இலங்கை-தமிழகம் இடையிலான விமான போக்குவரத்து இடைநிறுத்தப்பட்டிருந்தது.
இதனையடுத்து தமிழகத்தின் ஏனைய மாவட்டங்களில் இருந்து திருச்சி, மதுரை, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து இலங்கை செல்லும் விமான போக்குவரத்து தடை செய்யப்பட்டது.
இந்நிலையில்,தற்போது ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகு மதுரை- இலங்கை இடையிலான பயணிகள் விமான போக்குவரத்து தொடங்கியுள்ளது.
கொரோனா தடுப்பூசி போட்டவர்களுக்கு மட்டுமே விமானத்தில் பயணிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இன்று (07) ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் மூலம் 38 பயணிகள் மதுரை விமான நிலையம் வந்தடைந்துள்ளனர்.
விமான நிலையம் வந்தடைந்தவர்களுக்கு சுகாதாரத்துறை அதிகாரிகள் கொரோனா பரிசோதனை செய்த பின்னரே வெளியே செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.