January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

மீண்டும் பவானிபூர் தொகுதி இடைத் தேர்தலில் போட்டியிடும் மம்தா பானர்ஜி!

இந்தியாவின் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி மீண்டும் பவானிபூர் சட்டப் பேரவை தொகுதி இடைத் தேர்தலில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார்.

கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்டப் பேரவைத் தேர்தலில் திரிணாமூல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்க முதலமைச்சருமான மம்தா பானர்ஜி நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.

இருந்த போதிலும் மேற்கு வங்க சட்டப் பேரவையில் திரிணாமூல் காங்கிரஸ் பெரும்பான்மை பெற்றதால், மம்தா மீண்டும் முதலமைச்சரானார்.

இதனிடையே மேற்கு வங்கம் பவானிபூர் தொகுதிக்கு வரும் 30 ஆம் திகதி தேர்தல் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் பவானிபூர் தொகுதியில் நடைபெறும் இடைத் தேர்தலில் போட்டியிட போவதாக மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.

மம்தா பானர்ஜி முதலமைச்சர் பதவியில் நீடிக்க இந்த இடைத் தேர்தலில் வெற்றி பெறுவது கட்டாயம் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே பவானிபூர் தொகுதியில் வெற்றி பெற்றிருந்த திரிணாமூல் கட்சி எம்.எல்.ஏ, மம்தா பானர்ஜி போட்டியிட வசதியாக தனது பதவியை ராஜினாமா செய்ததாக கூறப்படுகிறது.