இந்தியாவின் மத்திய பிரதேசத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் உருவத்திலான வெள்ளிச் சிலைகளை நகை வியாபாரி ஒருவர் தயாரித்துள்ளார்.
மத்திய பிரதேசம், இந்தோரைச் சேர்ந்த நிர்மல் வர்மா என்ற நகை வியாபாரியொருவர் 150 கிராம் எடையில் இந்த சிலைகளை உருவாக்கியுள்ளார்.
குறிப்பாக இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் பல்வேறு பழக்க வழக்கங்களை அவரது தீவிர ஆதரவாளர்கள் பின்பற்றி வருகின்றனர்.
குறிப்பாக பிரதமர் பதவிக்கு வந்த ஆரம்ப காலங்களில் அவரது குர்தாவுக்கு தீவிர கிராக்கி இருந்தது. பிரதமர் மோடி, தனது குர்தாவிற்கு மேலாக அணியும் முண்டாசு கோட், ‘மோடி ஜாக்கெட்’ எனும் பெயரில் பிரபலமானது.
அதேபோல், புனே உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில், பிரதமர் மோடிக்கு ஆதரவாளர்கள் கோயில் கட்டி வணங்கியும் வருகின்றனர்.
இதனையடுத்து தற்போது புதிதாக மோடியின் வெள்ளியிலான உருவச் சிலை சந்தைகளில் விற்பனைக்கு வந்துள்ளது.
இதில் பிரதமர் நரேந்திர மோடி அணிவது போல் குர்தா மட்டும் ஒவ்வொரு சிலையிலும் ஒவ்வொரு வர்ணத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
நகை வியாபாரி நிர்மல் வர்மா வடிவமைத்துள்ள பிரதமர் மோடியின் 150 கிராம் எடையிலான வெள்ளிச் சிலை 11 ஆயிரம் ரூபாய் என கூறப்படுகிறது.
இந்த வெள்ளி சிலைகள் விரைவில் நாடு முழுவதும் விற்பனைக்கு அனுப்பப்படவிருப்பதாக நகை வியாபாரி நிர்மல் வர்மா தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடியின் இந்த வெள்ளிச் சிலைகளுக்கு அவரது ஆதரவாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.