மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படமான ‘தலைவி’ திரைப்பட நடிகை கங்கனா ரணாவத் ஜெயலலிதா நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
சென்னை வந்த கங்கனா ரணாவத் மெரினாவில் உள்ள முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் மலர் அஞ்சலி செலுத்தி மரியாதை செலுத்தினார்.
அதன்பின்னர் அங்கிருக்கும் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நினைவிடத்திலும் அஞ்சலி செலுத்தியுள்ளார்.
கங்கனா ரணாவத்துடன் தலைவி படத்தின் இயக்குநர் விஜய் உள்ளிட்ட படக்குழுவினர் மற்றும் பலர் வருகை தந்துள்ளனர்.
கங்கனா ரணாவத் நடிப்பில் உருவாகியுள்ள ‘தலைவி’ படம் வரும் 10 ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றுப் படமான தலைவி படத்தை ஏ.எல் விஜய் இயக்கியுள்ளதுடன், கங்கனா ரணாவத் ஜெயலலிதாவாகவும், எம்.ஜி.ஆர் கதாபாத்திரத்தில் நடிகர் அரவிந்த் சாமியும் நடித்துள்ளார்கள்.
தமிழ், இந்தி, தெலுங்கு என மும்மொழிகளில் கடந்த ஏப்ரல் மாதம் தலைவி திரைப்படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இருந்த போதிலும் கொரோனா காரணமாக படத்தை வெளியிட முடியாது என்று படக்குழுவினர் பின்னர் விளக்கமளித்தனர்.
இந்நிலையில், திரையரங்குகளை திறக்க தற்போது அனுமதி கிடைத்துள்ளதால், செப்டம்பர் 10 ஆம் திகதி விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ‘தலைவி’ படம் வெளியாகிறது.
படத்தின் புரமோஷன் வேலைக்காக சென்னை வந்துள்ள கங்கனா ரணாவத் ஜெயலலிதாவை போன்று இரட்டை விரல் காட்டி புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்தார்.
தமிழக மக்கள் மட்டுமின்றி, தமிழ் பேசும் மக்கள் மத்தியில் மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது ‘தலைவி’ திரைப்படம்.
Actress #KanganaRanaut pays tributes at former Tamil Nadu Chief Minister J Jayalalithaa's memorial in the Marina beach. She is in Chennai for #Thalaivii movie promotions. @IndianExpress pic.twitter.com/7Uy3XTSODG
— Janardhan Koushik (@koushiktweets) September 4, 2021