June 17, 2025 17:47:26

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி காலமானார்

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ,அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி காலமானார்.

உடல்நலக்குறைவு காரணமாக பெருங்குடி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த விஜயலட்சுமி சிகிச்சைப் பலனின்றி தனது 63 ஆவது வயதில் இன்று காலமானார்.

பன்னீர் செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி கடந்த இரு வாரங்களாக உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்தார்.

இதனை அடுத்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று விஜயலட்சுமிக்கு மாரடைப்பு ஏற்பட்டது. இதனால் சிகிச்சைப் பலனின்றி அவர் காலமானார்.

பன்னீர்செல்வத்துக்கும், அவரது குடும்பத்தினருக்கும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.