January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பிக் பாஸ் சீசன்-5 ப்ரோமோ வெளியாகியது!

ஒரு அசட்டு சிரிப்புடன் ஆரம்பிக்கலாமா என கமல்ஹாசன் கூறும் வசனத்துடன் வெளியாகியிருக்கிறது விஜய் டிவியின் பிக்பாஸ் சீசன் 5 ப்ரோமோ.

ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த பிக் பாஸ் ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது.

கருப்பு சட்டை, டெனிம் பேண்ட், சந்தன கலர் கோட் என வித்தியாசமாக ப்ரோமோ வீடியோ எடுக்கப்பட்டுள்ளது.

கமல்ஹாசனின் விக்ரம் படத்தின் டீஸரில் வருவதைப் போன்று ஆரம்பிக்கலாமா என்ற வசனத்துடன் தொடங்கியுள்ளது இந்த பிக் பாஸ் சீசன் 5 ப்ரோமோ.

இதன்மூலம் பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியையும் கமல்ஹாசனே தொகுத்து வழங்குவது உறுதியாகியுள்ளது.

கடந்த வாரம் பிக் பாஸ் ப்ரோமோ படப்பிடிப்பு நடைபெற்றதாக தகவல் வெளியாகியது.

இந்நிலையில் நேற்று மாலையில் பிக் பாஸ் தமிழ் 5 ப்ரோமோ வெளியாகியுள்ளது.

பிக் பாஸ் சீசன் 5 ப்ரோமோ வெளியாகிய சில மணி நேரங்களில் ஒரு மில்லியன் பார்வையாளர்களைக் கடந்திருக்கிறது.

பிக் பாஸ் தமிழ் 5 விரைவில் என முதல் ப்ரோமோ தற்போது வெளியாகியிருக்கிறது.

கூடிய விரைவில் நிகழ்ச்சி தொடங்கும் திகதியுடன் கூடிய விரிவான ப்ரோமோ வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் இந்த ஆண்டின் தொடக்கத்தில் முடிவடைந்தது குறிப்பிடத்தக்கது.

தமிழ் பிக் பாஸ் நான்காவது சீசன போட்டியில் வெற்றியாளராக ஆரி தேர்வு செய்யப்பட்டார் .