தே.மு.தி.க தலைவரும் நடிகருமான விஜயகாந்த் உயர் மருத்துவ சிகிச்சை பெறுவதற்காக சென்னையிலிருந்து அமெரிக்கா புறப்பட்டுச் சென்றுள்ளார்.
கடந்த சில ஆண்டுகளாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள விஜயகாந்த் தீவிர அரசியலில் ஈடுபடாமல் ஓய்வெடுத்து வருகிறார்.
அதேநேரம், விஜயகாந்த் தனது கட்சியின் முக்கிய நடவடிக்கைகள் மற்றும் ஏனைய கட்சித் தலைவர்களுடனான சந்திப்பில் மட்டும் அவ்வப்போது பங்கேற்று வந்தார்.
அதேபோன்று அவ்வப்போது மக்கள் நலன் கருதி அறிக்கைகளையும் வெளியிட்டு வந்தார்.
இந்நிலையில் தொடர் சிகிச்சை பெற்று வந்த விஜயகாந்த் உயர் சிகிச்சைக்காக மீண்டும் அமெரிக்கா சென்றுள்ளார்.
சக்கர நாற்காலியில் விமான நிலையத்துக்கு வந்த விஜயகாந்துடன், அவரது இளைய மகன் சண்முக பாண்டியனுடன் புறப்பட்டுள்ளார்.
இறுதியாக விஜயகாந்த் கடந்த 2018 ஆம் ஆண்டு அவர் அமெரிக்கா சென்று சிகிச்சை பெற்று வந்தார்.
சென்னையில் தொடர் சிகிச்சை பெற்று வந்த விஜயகாந்த் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைக்கு பிறகு குணமடைந்தார்.
இந்நிலையில், கடந்த 25 ஆம் திகதி தனது பிறந்தநாளை வீட்டிலேயே எளிமையாக கொண்டாடினார்.
விஜயகாந்தின் பிறந்த நாளன்று அவரது மகன் விஜய பிரபாகரன், தனது தந்தை உயர் சிகிச்சைக்காக வெளிநாடு செல்லவுள்ளதாக அறிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.