January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஆப்கானிஸ்தான் மக்கள் இந்தியா வர ஈ-விசா கட்டாயம்; மத்திய அரசு அறிவிப்பு

ஆஃப்கானிஸ்தானில் உள்ள மக்கள் இந்தியாவிற்குள் வர ஈ-விசா கட்டாயம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

ஆப்கானிஸ்தான் நாட்டு மக்கள் ஈ-விசா மூலம் மட்டுமே இந்தியாவிற்குள் வரவேண்டும் எனவும் மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தி இருக்கிறது.

ஆப்கானிஸ்தானை தலிபான்கள் மீண்டும் கைப்பற்றியுள்ள நிலையில், அங்குள்ள மக்கள் இந்தியாவை நோக்கி வருகை தருகின்றனர்.

இந்நிலையில் இந்திய அரசு அங்கிருந்து வருவோருக்கான சில நடைமுறைகளை அறிவித்திருக்கிறது.

இதனால் ஆப்கானிஸ்தான் நாட்டு மக்கள் இந்தியாவிற்குள் வர ஈ-விசா தேவை என இந்திய மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்திருக்கிறது.

இந்தியா வர விரும்பும் ஆப்கான் மக்கள் இணையத்தளம் வாயிலாக ,ஈ-விசாவுக்கு விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

ஆப்கானிஸ்தானின் பல்வேறு நகரங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்தியர்கள் சிக்கி இருப்பதாக கூறப்படுகிறது.

காபூலில் உள்ள 400-க்கும் மேற்பட்ட இந்தியர்களை நாட்டுக்கு அழைத்து வரும் நடவடிக்கை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்திய விமானப்படை விமானம் தொடர்ந்து ஆப்கானிஸ்தானில் இருந்து இந்தியர்களை மீட்டு வருகிறது.

இந்திய விமானப்படை விமானத்தில்,இந்தியர்கள் மட்டுமல்லாமல், ஆப்கானைச் சேர்ந்த இந்துக்களும் சீக்கியர்களும் அகதிகளாக இந்தியாவுக்கு வந்து கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இந்திய அரசு ஈ-விசா நடைமுறையை அறிமுகப்படுத்தி இருக்கிறது.