January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ரஷ்ய ஜனாதிபதி புடினுடன் இந்திய பிரதமர் மோடி ஆலோசனை

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுடன் இந்திய பிரதமர் நரேந்திரமோடி தொலைபேசி வாயிலாக ஆலோசனை நடத்தியிருக்கிறார்.

இதில் குறிப்பாக ஆப்கானிஸ்தான் விவகாரம் குறித்து பேசப்பட்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

பிரதமர் நரேந்திர மோடி ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுடன் சுமார் 45 நிமிடங்கள் தொலைபேசியில் ஆப்கானிஸ்தான் நிலைமை குறித்து பேசியதாக கூறப்படுகிறது.

இது குறித்த தகவல்களை பிரதமர் மோடி டுவிட்டரில் வெளியிட்டு இருக்கிறார்.

ஆப்கானிஸ்தானில் ஏற்பட்டு வரும் மாற்றங்கள் குறித்து ரஷ்ய ஜனாதிபதி புடினுடன் விரிவான வகையில் கருத்து பரிமாற்றம் செய்து கொண்டதாக தெரிவித்திருக்கிறார்.

கொவிட் -19 க்கு எதிரான இந்தியா-ரஷ்யா ஒத்துழைப்பு உட்பட இருதரப்பு விவகாரங்கள் தொடர்பாக விவாதித்ததாக பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.

முக்கியமான விஷயங்கள் குறித்து வரும் நாட்களிலும் பேச இருப்பதாக பிரதமர் தெரிவித்திருக்கிறார் .

ஆகஸ்ட் 31-ம் திகதிக்குள் காபூலில் இருந்து இந்தியர்கள் அனைவரையும் மீட்டுக் கொண்டு வர இந்தியா திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

குறிப்பாக காபூலில் சிக்கியுள்ள 400-க்கும் மேற்பட்ட இந்தியர்களை அழைத்து வர தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

அண்மையில் இந்திய விமானத்தில் ஏறுவதற்காக வெளியே வந்து சேர்ந்த 150 இந்தியர்களையும் தலிபான்கள் சுற்றி வளைத்துக் கொண்டனர்.இதனைத் தொடர்ந்து இந்தியர்களை மீட்க தலிபான்களுடன் இந்தியா பேச்சுவார்த்தை நடத்தியது.

பின்னர் அடுத்தடுத்து இரண்டு விமானங்களில் இந்தியர்கள் மீட்கப்பட்டு இந்தியா அழைத்து வரப்பட்டனர்.இதில் இந்தியா வந்தவர்களில் இந்தியர்கள் மட்டுமன்றி ஆப்கன் நாட்டைச் சேர்ந்த மக்கள் சிலரும் அடைக்கலம் தேடி அகதிகளாக இந்தியா வந்துள்ளனர்.