File Photo
ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் கைப்பற்றியதை தொடர்ந்து, இந்தியா தனது பாதுகாப்பு நிலைமையை மீளாய்வு செய்து புதிய பாதுகாப்பு திட்டங்களை தயாரித்து வருவதாக ‘தி இந்து’ செய்தி வெளியிட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானில் இடம்பெற்ற மோதலில் இந்தியாவில் தடை செய்யப்பட்ட இரண்டு பயங்கரவாத அமைப்புகளான லக்ஷர் இ தொய்பா மற்றும் ஜெய்ஷ் இ முகமது ஆகியவை தாலிபான்களுக்கு உதவியுள்ளதாக ‘தி இந்து’ குறிப்பிட்டுள்ளது.
குறித்த இரண்டு அமைப்புகளின் முக்கிய நோக்கம் ஜம்மு -காஷ்மீரில் பயங்கரவாத நடவடிக்கைகளை மேற்கொள்வது என்பதாகவே இருந்துள்ளது. இந்நிலையில் ஆப்கானிஸ்தானில் சண்டையில் அவர்களின் உறுப்பினர்களும் ஈடுபட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
குறிப்பாக, ஜெய்ஷ்-இ-முகமது கமாண்டோ உறுப்பினர்கள் தாலிபான் மற்றும் ஹக்கானி நெட்வொர்க்குடன் இணைந்து அமெரிக்க மற்றும் நேட்டோ படைகளுக்கு எதிராகப் போரிட்டதாக கூறப்படுகிறது.
ஆப்கானிஸ்தானின் கட்டுப்பாட்டை தாலிபான் கைப்பற்றியதால், விடுவிக்கப்பட்டுள்ள தீவிரவாத கைதிகளிடையே முக்கிய தீவிரவாத அமைப்பின் உறுப்பினர்களான லக்ஷர் இ தொய்பா மற்றும் ஜெய்ஷ் இ முகமது ஆகியோர் உள்ளனர்.
இந்த சூழலில், இந்திய பாதுகாப்பு அதிகாரிகள் புதிய பாதுகாப்புத் திட்டங்களைத் தயாரித்து வருகின்றனர்.
ஆப்கானிஸ்தானில் நிலைமைகள் அமைதியடைந்தவுடன் புதிய திட்டத்தை செயல்படுத்த இந்தியா எதிர்பார்த்துள்ளதாக ‘தி இந்து’ தெரிவித்துள்ளது.